அன்பு வேண்டுகோள்
புதிய டொமைனுக்கு மாறிய பிறகு நான் பதிவுகள் போட்டு சில மணி நேரம் கழித்தே ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரிகிறது . ஆகையால் இதனை சரி செய்வதற்கு எனது ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடரவும்

Friday, January 18, 2013

பரிசுகளும் முடிவுகளும்:

போன மாதம் முழுவதும் பல பல போட்டிகள். சிலரின் போட்டிகளில் நானும் கலந்துக்கொண்டேன். அதில் இந்த மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  கலந்துக்கொண்ட போட்டிகளில் பரிசுகளும் அவர்டுகளும் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்சியினை தருகிறது. அதனை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்..
My Healthy Happy Kitchen நடத்திய Feast of Sacrifice:
சில நாட்களுக்கு முன்பு நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஆசியா அக்கா நடத்திய போட்டியில் என்னால் முழுமையாக கலந்துக்கொள்ள் முடியவில்லை. இருப்பினும் கடைசி நிமிடங்களில் என்னால் முடிந்த குறிப்புகளை கொடுத்தேன்.  சிறப்பாக நடத்திய "Feast of Sacrifice"ல் என்னை Third Top Contributor ஆக தேர்வு செய்து அதற்கு ரூபாய் 1,000 gift cheque எனது இந்திய முகவரிக்கு அனுப்பி வைத்தார்கள் அவர்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.


  Mrs.Swasthi  , Mrs. Priya Suresh , Mrs . Divya Pramil , Mrs.Sherin , Mrs. jillu பரிசுகளை அள்ளிச்சென்ற மற்ற தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்..

அடுத்ததாக 
இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமம் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டி .
நமக்கும் கட்டுரைக்கும் ரொம்ப ரொம்ப தூரம் தான் எவ்வளவு நாள் தான் மெஹந்தி போட்டிக்கும், சமையல் போட்டிக்கே குறிப்புகள் அனுப்புவது கொஞ்சம் ட்ரை தான் பண்ணி பார்ப்போமே என்று எனது கணவரின் தம்பியின் உதவியுடன் கட்டுரை எழுதினேன்..  முடிவுகள் போன வாரம் அறிவித்து இருந்தார்கள்.. அங்கு நம்ம பேர் இருக்காது என்று தெரியும் ஏன்னா சூரப்புலிகள் நிறைபேர் கலந்துக்குறாங்க என்று தெரிந்துக்கொண்டேன்.. இருந்தாலும் நம்ம பேரும் இருந்துச்சு..ங்க ஆமாங்க நம்புங்க கலந்துக்கிட்டவங்க லிஸ்ட் போட்டு போட்டியில் கலந்துக்கொண்டவங்க அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் அறிவித்திருந்தார்கள். (எதிர்க்குரல் (இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்)) 

முதல் பரிசாக  ரூபாய் ஐந்தாயிரம்  தட்டிச் செல்பவர்... சகோ. Dr. Captain. S.ABIDEEN, இளையான்குடி. அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டாம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் தட்டிச்சென்றவர் : கோ. உம்ம் ஒமர் என்ற அனிஷா, அமெரிக்கா.  அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

மூன்றாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரம்  வென்றவர்: கோ. இப்னு முஹம்மது, கோவை.  எனது வாழ்த்துக்கள்.. 

என்னுடன் சேர்ந்து ஆறுதல் பரிசுகளை பெற்ற

அப்துல் ஹமீது, இப்னு முஹம்மது, அஹ்மத் யஹ்யா, Peer Mohamed A.M., உம்மு ஷாஜ்,எஸ். நிலோபர் ரஹ்மான், அப்துல் நாசர், P. அப்துல் ஹக், நபிலா, உம்மு ஹனா, இப்ராஹிம் ஷா, பீர் முஹம்மத், சா.உம்மு ஹபீபா, ஆமினா, எம். சகீனா பேகம், பானு, ஹுசைனம்மா, ஆயிஷா பேகம், ஸ்டார்ஜன்
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

போட்டியினை மிக சிறப்பாக நடத்திய இஸ்லாமியப் பெண்மணி மற்றும் டீக்கடை பேஸ்புக் குழுமத்துக்கு  எனது அன்பான பாராட்டுக்களும் நன்றிகளும்
அடுத்ததாக 
சமையல் அட்டகாசம் ப்ளாகில் நடத்திய பேச்சுலர் சமையல் போட்டி :
போன மாதம் சிறப்பக நடைப்பெற்ற போட்டிகளில் இந்த போட்டியும் ஒன்று. இந்த போட்டியினை நம் அனைவரும் அன்பாய் அழைக்கும் ஜலீலா அக்கா அழகாக நடத்தி அதனை சிறப்பாகவும் தனி தனியாகவும் தேர்வு செய்து பரிசுகளும் அவார்டும் அறிவித்திருந்தார்கள்.  என்னுடைய கோல்டன் ப்ரான், தந்தூரிசிக்கன், நூடுல்ஸ் செலக்ட் செய்து இருக்காங்க..
Kitchen Queen award

முதல் பரிசாக  Exclusive Party Hand Purse
 அதில் கிச்சன் குயின் என்ற அவர்டும் முதல் பரிசாக  Exclusive Party Hand Purse ம் எனக்கு அறிவித்திருக்கிறார்கள்.. என்னுடைய குறிப்புகளை தேர்வு செய்தவர்களுக்கு எனது நன்றிகள்.. சிறப்பாய் போட்டிகள் நடத்திய உங்களுக்கும் எனது நன்றிகள். உடனே எனக்கு மெயில் மூலம் தகவல் தந்த ஏஜ்ஜலின் அவர்களுக்கும் எனது நன்றிகள். என்னுடன் சேர்த்து போட்டியில் கலந்துக்கொண்டு பரிசுகள் பெற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Best Breakfast Recipe award

Best Lunch Recipe Award

Best Sidedish Recipe Award

Well Presented Recipe award
மற்றும் போட்டியில் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்ற
kitchen king பட்டம் வெற்ற நம் வலையுலகில் அனைவராலும் அன்பாய் பாசமாய் அண்ணன் , ஐயா என்று அழைக்கும் அண்ணன் வை. கோபாலகிருஷ்ணன் அவரகளுக்கு எனது பாராட்டுக்கள்.
மகி ஸ்பேசில் கலக்கிக்கொண்டு இருக்கும் மகிக்கு எனது பாராட்டுக்கள்.
பூசார் என்று அனபாய் அழைக்கும் அதிராவுக்கு எனது  வாழ்த்துகள்
மேலும் பரிசு பெற்ற அஸ்மாஅக்கா ,ஆமினா ,ஆசியா அக்கா ,சாந்திஅமைதிசாரல் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகள் .



123Friendster.Com

123Friendster.com - More Thank You Comments


Kids drawing contest result பற்றிய ஓர் அறிவிப்பு:

போட்டியில் கலந்துக்கொண்டு முதல் பரிசுகள் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கும்(S. SUFIYA MUSKAAN , Thanveer Sham ) பரிசு தொகை அவர்களின் account க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசு பெற்றவர்கள் Mohammed Shaakir, Sankya Manikandan (shaakir க்கு மெயில் அனுப்பியும் இன்னும் account number அனுப்பவில்லை. நீங்கள் கொஞ்சம் காலம் தாமதிக்காமல் அனுப்பி வைத்தால் இருவருக்கும் பரிசு தொகை மிக விரைவாக அனுப்பி வைக்க முடியும்) 

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தவிர  கலந்துக்கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் இந்த மாதம் இறுதியில் அல்லது  அடுத்த மாதம் 15தேதிக்குள் அனுப்பிவைக்கப்படும். (இந்தியாவில் இருக்கும் இரண்டு நண்பர்களிடம் பரிசுகளை கூரியர் மூலமாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொண்டேன் அவர்களின் வேலைகளுக்கு இடையில் எனக்கு உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள்.)  

இவர்களுக்கு அதிகம் சிரமாம் கொடுக்காமல் இருக்க  இந்திய முகவரி இன்னும் அனுப்பாதவர்கள் சீக்கரம் அனுப்பி வைத்தால் அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிசினை அனுப்பிவிடுவார்கள்.

25 comments:


  1. Congrats Faiza. Nice sharing. My best wishes to all other winners.

    ReplyDelete
  2. முதல் பரிசு பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.கிச்சன் குயின் என்ற அவர்டுக்கு வாழ்த்துக்கள்.

    மற்றும் போட்டியில் கலந்துக்கொண்டு பரிசுகளை பெற்ற
    kitchen king பட்டம் வெற்ற நம் வலையுலகில் அனைவராலும் அன்பாய் பாசமாய் அண்ணன் , ஐயா என்று அழைக்கும் அண்ணன் வை. கோபாலகிருஷ்ணன் அவரகளுக்கு எனது பாராட்டுக்கள்.
    மகி ஸ்பேசில் கலக்கிக்கொண்டு இருக்கும் மகிக்கு எனது பாராட்டுக்கள்.
    பூசார் என்று அனபாய் அழைக்கும் அதிராவுக்கு எனது வாழ்த்துகள்
    மேலும் பரிசு பெற்ற அஸ்மாஅக்கா ,ஆமினா ,ஆசியா அக்கா ,சாந்திஅமைதிசாரல் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகள் .
    //

    நானும் உங்களுடன் சேர்ந்து அவர்களை வாழ்த்துகிறேன்.அவார்ட் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பரிசுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மன்ம்
    நிறைந்த
    அன்பான
    இனிய நல்

    வாழ்த்துகள்,
    வாழ்த்துகள்,
    வாழ்த்துகள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜேஸ்வரி

      Delete
  7. வாழ்த்துக்கள் பாயிஜா!!

    ReplyDelete
  8. அழகாக தொகுத்து போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் பாயிஜா

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் நன்றி அக்கா.. அழகான அவார்டுக்கும் பரிசுக்கும்.

      Delete
  9. வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா ஆச்சல்

      Delete
  10. வாழ்த்துக்கள் பாயிஜா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிக்கா அக்கா

      Delete
  11. நிறைய பரிசுகள் வாங்கி இருக்கீங்க... வாழ்த்துக்கள் பாயிஸா..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா ராம்

      Delete
  12. சலாம் ஃபாயிஜா!

    வரிசையாக பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! ஏற்கனவே குளிர் -5°ல இருக்கு. நல்லா போர்த்திக்கோங்க சந்தோஷத்துல நடுக்காம ;))

    நீங்கள் தேர்ந்தெடுத்த சிறப்புப் பரிசு அறிவிப்பிற்கும், ஜலீலாக்கா தந்த பரிசுக்குமாக சேர்த்து பதிவு போடணும், இன்ஷா அல்லாஹ் :)

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் ஃபாயிஸா! நீங்கள் பங்குபெற்று வென்ற பரிசுகளுக்கும், விருதுகளுக்கும், நீங்க நடத்திப் பரிசுகள் வழங்கியமைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஃபாயிஸா!

    இன்னும் பலப்பல விருதுகள் பெற என் இனிய வாழ்த்துக்கள்!

    உங்கள் வாழ்த்திற்கும் நன்றி! :)

    ReplyDelete
  14. வாழ்துக்கள் faiza .

    ReplyDelete

என் வலைப்பூவுக்கு வந்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்தினை பார்ப்பதில் மகிழ்ச்சி எனக்கு.. தொடர்ந்து வாங்க.. கருத்தினை தாங்க..
என்றும் நட்புடன் உங்கள்
ஃபாயிஷாகாதர்

Related Posts Plugin for WordPress, Blogger...